This Article is From Nov 10, 2018

’கஜா’ புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

’கஜா’ புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையம் இயக்குநர் புவியரசன்,

நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும், அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து பிறகு மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14ம் தேதி இரவு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும்.

மேலும், 14ம் தேதி மாலையிலிருந்து வடகடலோர தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 12ம் தேதி இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தமான் கடல்பகுதியில் உருவெடுக்கவுள்ள புயலுக்கு கஜா என, தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது. வர்தா புயல் போன்று, இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல் என்றும், வரும் 16 ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் ஐரோப்பிய வானியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 

.