This Article is From Aug 03, 2018

2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில், லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்

2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில், லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையிலான தென்மேற்கு பருவ மழை காலத்தில், இயல்பான அளவு மழை பதிவாகியுள்ளது என்றார். மேலும், அதே காலகட்டத்தில் மலைப்பகுதிகளான, தேனி, கோவை, நெல்லை மாவட்டங்களில் இயல்பை விட 50% அதிக மழை பெய்திருப்பதாகவும் கூறினார்.

.