Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 01, 2018

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை இன்று சந்தித்தார்.

Advertisement
இந்தியா

செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளிக்கும் பரூக் அப்துல்ல, சரத்பவார், சந்திரபாபு நாயுடு.

New Delhi:

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக முகாமில் இருந்த ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு தாவியுள்ளார்.

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 95 இடங்களிலும் மற்ற 10 இடங்கள் சிறிய கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், மக்களவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்த அவர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று டெல்லிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

Advertisement

இதன்பின்னர் மூன்று தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, பாஜகவிடம் இருந்து இந்தியாவின் எதிர்காலத்தை காப்பாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.

சரத்பவார் பேசுகையில், “ நாங்கள் இன்று இங்கு ஒன்றுபட்டுள்ளோம். மற்ற எதிர்க்கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம். சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றார்.

Advertisement

இதன்பின்னர், மேலும் சில தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசவுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசுக்கு எதிர் அணியில் தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி இருந்துள்ளது.

1990-களில் அக்கட்சி இடது சாரிகளுடனும், 1999, 2004,மற்றும் 2014-ல் தெலுங்கு தேச கட்சி பாஜகவுடனும் கூட்டணி அமைத்திருந்தது.

Advertisement

ஆந்திராவில் ஆளும் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பாஜக இடையிலான உறவு ஆகியவற்றால் சந்திரபாபு நாயுடுவுக்கு வலுவான கூட்டணி தேவைப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisement