This Article is From Jan 21, 2019

இன்றும் சந்திர கிரகணம் : பிரமாண்டமாக காட்சியளித்த நிலவு

Lunar Eclipse in January 2019: இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. சில நாடுகளில் சந்திர கிரணகத்தை நேரடியாகவே பார்க்க முடியும். பூமிக்கு மிகவும் அருகில் வருவதால் நிலவு பிரமாண்டமாக தெரியும்.

இன்றும் சந்திர கிரகணம் : பிரமாண்டமாக காட்சியளித்த நிலவு

Lunar Eclipse 2019: இந்திய நேரப்படி காலை 10.11-க்கு இன்று சந்திர கிரகணம் தொடங்கியது.

New Delhi:

இந்தியாவில் இன்றைக்கு சந்திர கிரகணம் காலையில் தொடங்கியுள்ளது. பகல் நேரம் என்பதால் இதனை பார்க்க பலருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது. இதனை நேரலையாக  timeanddate.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். 

தொடங்கிய நேரத்தில் இருந்து 1 மணி மற்றும் 2 நிமிடங்கள் வரை சந்திர கிரகணம் (Chandra Grahan) நீடிக்கும். அப்போது சிவப்பு வண்ணத்தில் பிரமாண்டமாக நிலா காட்சியளிக்கும். 

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் சூரிய கிரணகத்தை காண முடியும். இதற்காக சிறப்பு தொழில்நுட்ப கருவிகள் ஏதும் தேவையில்லை. வெறும் கண்ணாலே இதனை காண முடியும். 

சந்திர கிரகணத்தின்போது, 3.6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அருகே நிலா காணப்படும். உலக நாடுகளில் நேரத்திற்கு ஏற்ப சூரிய கிரகணம் மாறுபடும். 
திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3.34 முதல் 4.34 வரை பிரான்சில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அமெரிக்காவை பொறுத்தவரையில் மாலை 7.33-க்கு சூரிய கிரகணம் தொடங்கியது. 

ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் சந்திர கிரகணத்தை (Chandra Grahan) மிக அழகாக காண முடியும். ஆனால் அதிக நேரத்திற்கு இந்த நிலை நீடிக்காது. கிழக்கு ஐரோப்பா பகுதியில் சந்திர கிரகணத்தின் தொடக்கத்தை காண முடியும். ஆனால் முடிவதை பார்க்க முடியாது. 

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடகளில் மட்டுமே சந்திர கிரகணத்தை முழுமையாக காண முடியும். 

சந்திர கிரகணத்தின்போது நிலா பிரமாண்டமாகவும், சிவப்பு வண்ணத்திலும் காணப்படும். ஏனென்றால் நிலாவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வருவதால், சூரிய ஒளி நேரடியாக நிலா மீது பட முடியாது. இதனால் நிலா சிவப்பு வண்ணத்துடன் சந்திர கிரகணத்தின்போது காணப்படும். 
 

.