Read in English
This Article is From Apr 11, 2019

150 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்-சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா திவிவேதி வாக்களிப்பு இயந்திரக் கோளாறுகளினால் வாக்களிக்கவில்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Posted by (with inputs from Agencies)

காலை 9:30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்

New Delhi:

ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இன்று கடிதம் எழுதினார். மாநிலத்தில் சுமார் 150 வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். தொழில்நுட்ப கோளாறுகளினால் இழந்த நேரத்தை சரிக்கட்ட வாக்குபதிவு நேரத்தையும் அதிகரிக்க வேண்டும்  என்றும் கேட்டுக் கொண்டார்.

தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ணா திவிவேதி வாக்களிப்பு இயந்திரக் கோளாறுகளினால் வாக்களிக்கவில்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

வாக்கெடுப்பு தொடங்க தாமதமாகிவிட்டதால், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெயிலில் காத்துக் கொண்டிருந்தார்கள். வாக்குப்பதிவு மிக மெதுவாக நடைபெறுகிறது. பழுதான வாக்குபதிவு இயந்திரத்தை மாற்றுவதற்குள் பல வாக்காளர்கள் வாக்களிக்காமலே திரும்ப சென்று விட்டனர்.  என்றும் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார். 

Advertisement

காலை 9:30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement