காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தார்.
காவேரி மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். முன்னதாக நேற்று, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவ கெளடா, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதி நூறு ஆண்டுகளைத் தாண்டி வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்க எனக்கு பெரும் ஆதரவாக இருந்தவர் கருணாநிதி” என்று கூறினார். அவர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனி மொழி எம்.பியிடமும் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு தேசிய அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்களும் வருகை தந்து விசாரித்து வருகின்றனர். அடுத்ததாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நாளை காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.