This Article is From Feb 10, 2019

ஆந்திராவை கொள்ளையடித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு: மோடி கடும் தாக்கு!

பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சந்திராபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்ததார்.

ஆந்திராவை கொள்ளையடித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு: மோடி கடும் தாக்கு!

ஹைலைட்ஸ்

  • ஆந்திர மாநிலம் முழுவதும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்
  • சந்திபாபு நாயுடுவை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்
  • தெலுங்குதேசம், காங்கிரஸ், இடதுசாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

பாஜகவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி பிரிந்த பின்பு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா சென்றார். அங்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சந்திராபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்ததார்.

என்.டி.ராமராவுக் நம்பிக்கை துரோகம் செய்தவர்தான் சந்திரபாபுநாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசையில் மாமானார் என்.டி.ராமராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமராவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறி சந்திரபாபு நாயுடு ஆந்திர மக்களுக்கும் துரோகம் செய்து விட்டார். அவரது எண்ணங்களை குழி தோண்டி புதைத்துவிட்டார்.

தம்மால் விமர்சிக்கப்பட்டவர்களுடன் சந்திரபாபு நாயுடு தற்போது கூட்டணி சேர்ந்துள்ளார். மேலும் அரசியலில் அணி மாறுவதில் முன்னோடியாக சந்திரபாபு திகழ்கிறார். வளர்ச்சிக்கு எதிரான கட்சிகள் எல்லாம், தமக்கு எதிராக அணி திரண்டு நிற்கிறார். பொது மக்களின் வரி பணத்தை தனது அரசியல் கூட்டத்திற்கு அவர் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த நிகழ்ச்சி பாஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கடுமையாக விமர்சித்தார்.

ஆந்திராவில் இரு பெட்ரோலியம் மற்றும் வாயு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதேபோன்று நெல்லூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். மேலும் ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர் உருவாக்க பணிகள் அடிக்கல் நாட்டினார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, தெலுங்குதேசம் கட்சியினரால் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டுப்பட்டு, பதாகைகள் வைக்கப்பட்டு, கறுப்புகொடிகள் கட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதேபோல் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பிரதமர் மோடியின் ஆந்திர வருகையை முன்னிட்டு, பாஜக தரப்பில் தொண்டர்கள் பேரணி நடத்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

.