This Article is From Dec 27, 2018

''மோடியிடம் 3-வது அணியை விளக்கினீர்களா?'' - கே.சி.ஆரை சீண்டிய சந்திரபாபு நாயுடு

மோடியை சந்தித்து பேசியது தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் நாடகம் ஆடி வருகிறார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

''மோடியிடம் 3-வது அணியை விளக்கினீர்களா?'' - கே.சி.ஆரை சீண்டிய சந்திரபாபு நாயுடு

பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

New Delhi:

பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனை விமர்சித்திருக்கும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, மாநில பிரச்னைகள் பற்றி பேசினீர்களா அல்லது 3-வது அணியை நிலைமை குறித்து விளக்கம் அளித்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கூட்டணியில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அக்கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துள்ள தெலுங்கு தேசம், மற்ற கட்சிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.ஆந்திரா, தெலங்கானா அரசியலில் தெலுங்கு தேசமும், சந்திர சேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரிக் கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கூட்டணியை சந்திரபாபு நாயுடு பலப்படுத்தி வரும் அதே நேரத்தில், பாஜக - காங்கிரசுக்கு மாற்றான கூட்டணியை அமைப்பதில் சந்திர சேகர ராவ் தீவிரம் காட்டுகிறார்.

0u1q5gfc

இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில கட்சி தலைவர்களை சந்திர சேகர ராவ் சந்தித்து பேசியுள்ளார். இந்தநிலையில் பிரதமர் மோடியை தெலங்கான முதல்வர் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, மாநில பிரச்னைகள் குறித்தும், கேந்திர வித்யாலயாக்கள் அமைப்பது, கரிம் நகரில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் ஏற்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பேசப்பட்டது என்று சந்திர சேகர ராவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விமர்சித்திருக்கும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, மாநில பிரச்னைகளை பேசினீர்களா அல்லது 3-வது அணி எந்தளவில் உள்ளது என்பதை மோடியிடம் விவரித்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா மாநில தேர்தலின்போது, காங்கிரசும், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியும் கூட்டணி வைத்திருந்தன. தேர்தல் பிரசாரத்தின்போது, சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பாஜகவின் 2-வது அணியாக செயல்பட்டு வருகிறது என்று சந்திரபாபு நாயுடுவும், ராகுல் காந்தியும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

.