বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 03, 2019

’நாசாவிடமிருந்து நல்ல பதில் கிடைத்தது’: சென்னை பொறியாளர் நெகிழ்ச்சி!

Chandrayaan 2: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய தினமும் 7 மணி நேரம் தனது பணியை முடித்து வந்த பின்னர் வீட்டில் செவிட்டதாகவும், இதற்காக இணைய தொடர்புடன் கூடிய லேப்டாப்பை மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கும், தகவல் தெரியப்படுத்தியதாக சென்னை பொறியாளர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. எனினும், விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்து நாசாவின் விண்கலத்தாலும் கண்டறிய முடியவில்லை. 

Advertisement

இதைத்தொடர்ந்து, நாசா கடந்த செப்.26ம் தேதி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, அதில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, லேண்டர் தரையிரங்கும் முன் அதே பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும் ஒப்பிட்டு தமிழக இளைஞர் சண்முக சுப்ரமணியன் அடையாளப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய தினமும் 7 மணி நேரம் தனது பணியை முடித்து வந்த பின்னர் வீட்டில் செவிட்டதாகவும், இதற்காக இணைய தொடர்புடன் கூடிய லேப்டாப்பை மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தேடுதலை 2 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இதைத்தொடர்ந்து தான் கண்டறிந்ததை நாசா மற்றும் இஸ்ரோவுக்கு ட்வீட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், நாசாவின் விண்கலமான LRO குழுவில் உள்ள இரண்டு விஞ்ஞாணிகளுக்கு தனியாக மெயிலும் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, தற்போது, நாசாவில் இருந்து தனது முயற்சிக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது என்று சுப்ரமணியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

மேலும், இது மிகப்பெரிய முயற்சி தான், அதே நேரத்தில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. விக்ரம் லேண்டர் நிலவின் மேல்பரப்பில் இறங்கிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். இஸ்ரோ மீண்டும் ஒரு வெற்றிகராமான சந்திராயன் 3-ஐ செலுத்தும் என்றும், நிச்சயம் அது சந்திரனில் தரையிரங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Advertisement

சண்முக சுப்ரமணியன் மதுரையை சேர்ந்தவர் ஆவார். சென்னையில் ஒரு பன்னாட்டு ஐடி நிறவனத்தில் பணிபுரிந்து வரும் அவர் திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அவரது இந்த முயற்சி இளைஞர்களை நிச்சயம் ஊக்குவிக்கும் என்று விண்வெளி ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

Advertisement