சந்திராயன்-2 அதிகாலை 1.55 மணி அளவில் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது.
New Delhi: சந்திரயான்-2 இன்று இரவு நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முழு உலகமும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஹெவி-லிப்ட் ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி மார்க்-3ல் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று இரவு நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயன்-2 தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. நாளை (சனிக்கிழமை) அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. சந்திராயன்-2 முக்கியமான 3 தொழில்நுட்பங்களை கொண்ட விண்கலம் ஆகும். அவை ஆர்பிடர் (Orbiter), லேண்டர் மற்றும் ரோவர் ஆகும்.
சந்திராயன் - 2 என்றல் என்ன?
நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இதுவரை அனுப்பப்பட்ட 'லேண்டர்' சாதனங்கள் அனைத்துமே வட துருவப் பகுதியில்தான் தரை இறங்கி உள்ளன. ஆனால், உலக விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக சந்திராயன்-2 திட்டத்தின் மூலமாக நிலவின் தென்துருவ பகுதிகளில் ஆராய்ச்சியை நடத்த இருக்கிறது இஸ்ரோ அமைப்பு.
சந்திராயன்-2 முக்கியமான 3 தொழில்நுட்பங்களை கொண்ட விண்கலம் ஆகும். அவை ஆர்பிடர் (Orbiter), லேண்டர் மற்றும் ரோவர் ஆகும். ஆர்பிடர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 யின் மூலம் ஏவப்பட்டது. சந்திராயன்-2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடைந்தது. அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.
சந்திராயன் - 2 நிலவில் தரையிரங்கும் நேரம்
சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவியானது, நள்ளிரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரை இறங்க உள்ளது இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-2 முக்கியமான 3 தொழில்நுட்பங்களை கொண்ட விண்கலம் ஆகும். அவை ஆர்பிடர் (Orbiter), லேண்டர் மற்றும் ரோவர் ஆகும்.
சந்திராயன் - 2 நிலவில் தரையிரங்கிய பின்னர் என்ன எதிர்பார்க்கலாம்? விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் வெளியேவரும். அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். நிலவின் வளங்கள், நிலவில் இருக்கும் நீர் உள்ளிட்டவை குறித்து ரோவர் ஆராயும். மிகவும் அதிக ரெசல்யூஷன் கொண்ட படங்களையும் அது எடுக்கும்.
சந்திராயன் - 2 இதுவரை சாதித்தது என்ன?சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு, அதிலிருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.
இதையடுத்து, கடந்த 22ம் தேதி நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியது. 2650 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பை சந்திரயான் 2 விண்கலம் எடுத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.
3-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.
சந்திரயன் 2 மிஷனுக்குப் பிறகு என்ன?
2022ஆம் ஆண்டில் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்காக இந்தியா திட்டமிட்டு வருகிறது.