Chandrayaan: பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்
ஹைலைட்ஸ்
- இஸ்ரோ மையத்தில் மாணவர்களுடன் உரையாடினார்- பிரதமர் மோடி
- சந்திராயன் -2 முக்கிய நிகழ்வை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்
- சந்திராயன் 2 லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தும் தொடர்பினை இழந்தத
Bengaluru: இஸ்ரோ மையத்தில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. அப்போது அங்கிருந்த மாணவன் நாட்டின் குடியரசுத் தலைவராக ஒருவர் என்ன செய்ய வேண்டும்..? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.
“ஏன் குடியரசுத் தலைவராக வேண்டும்? ஏன் பிரதமராகக் கூடாதா? என்று பிரதமர் மோடி கூறினார்.
மாணவர்கள் பிரதமர் மோடியை சுற்றி நின்று ஆர்வமாக பேசினார்கள். “வீட்டிற்கு சென்றது வீட்டில் கேட்டால் என்ன சொல்வீர்கள்..?” என்று பிரதமர் மோடி மாணவரிடம் கேட்டார்
சந்திராயனின் லேண்டரான விக்ரமுக்கு தகவல் தொடர்பு இழந்து விட்டதாக கூறுவேன் என்று மாணவர் பதிலளித்தார். “நன்றாக படித்து, கடினமாக உழைத்து வாழ்க்கையில் எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்” என்று பிரதமர் மோடி மாணவர்களிடம் கூறினார். பிரதமர் மோடி பூட்டானைச் சேர்ந்த மாணவர்களுடன் சுருக்கமாக உரையாடினார்.
பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
“வாழ்க்கையில் பெரிய குறிக்கோளையும் இலக்குகளையும் சிறிய சிறிய பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். நீங்கள் தவறவிட்டதை மறந்துவிடுங்கள் ஒருபோதும் ஏமாற்றத்தை வாழ்வில் அனுமதிக்காதீர்கள்” என்று பிரதமர் மாணவர்களிடம் கூறினார்.
அதன்பின் பிரதமர் மோடி விஞ்ஞானிகள் தங்களது சிறந்ததைக் கொடுத்தனர் என்று ட்விட் செய்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு முன்பு சந்திராயன் 2 லேண்டருடனான தொடர்பு இழந்தது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.