செப்டம்பர் 7-ம்தேதி நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- Advanced moon lander 'Vikram' separated from Chandrayaan 2 orbiter: ISRO
- All systems of Chandrayaan 2 orbiter and lander are healthy, says ISRO
- Vikram lander will head to a region on moon that is less explored
New Delhi: நிலவின் பரப்பில் தரையிறங்குவதற்கு ஏதுவாக சந்திரயான் 2 செயற்கைகோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்துள்ளது. இந்த தகவலை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது.
சந்திராயன் 2 திட்டத்தின் தொடக்கம் முதலே ஆர்பிட்டர் மற்றும் விக்ரம் கருவியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ள அனைத்து கருவிகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இஸ்ரோ நம்பிக்கை கூறியுள்ளது.
வெற்றிகரமாக பிரிந்திருக்கும் விக்ரம், நிலாவின் வட அரைக்கோளம் பகுதியில் தரையிறங்கும். செப்டம் 7-ம்தேதி இந்த நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவின் தரைப்பகுதியை தொட்டதும் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் எனப்படும் ரோவர் வெளியே வந்து, நிலாவின் மண் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
30 நாட்கள் பயணத்திற்கு பின்னர் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி நிலாவின் சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
இருப்பதிலேயே சந்திரயான் 2 விண்கலம் நிலாவில் தரையிறங்குவதுதான் மிகவும் சிக்கலான பணியாகும். ஏனென்றால் மணிக்கு தற்போது சுமார் 39 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரயான் 2 சென்று கொண்டிருக்கிறது. இதேவேகத்தில் தரையிறங்கினால் வெடித்துச் சிதறுவது நிச்சயம் என்பதால் அதன் வேகத்தை குறைத்து இறக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ரூ. 1,000 கோடி என்ற மிகக்குறைந்த பட்ஜெட்டில் கடந்த ஜூலை 22-ம்தேதி சந்திரயான் 2 விண்ணுக்கு செலுத்தப்பட்டது.