বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 07, 2019

Chandrayaan 2: உங்களோடு துணை இருக்கிறேன்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி ஆறுதல் #LiveUpdates

Chandrayaan 2 Landing Updates: சந்திராயன் 2 குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன், “நாங்கள் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகவும் கடினமான திட்டம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

சந்திராயன் 2-வின் விக்ரம் லேண்டர், ஏற்கெனவே இரண்டு பெரிய எல்லைகளைக் கடந்துள்ளது

New Delhi:

இன்று சந்திராயன் 2 விண்கலம், நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும்போது விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது இஸ்ரோ. சந்திராயன் 2-வின் விக்ரம் லேண்டர், ஏற்கெனவே இரண்டு பெரிய எல்லைகளைக் கடந்திருந்தது. அது நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 1:30 முதல் 2:30 மணிக்கு இடையில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்தை நேரலையில் பார்க்க பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்குப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். 

விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்றும் நிலவின் வளங்கள், நிலவில் இருக்கும் நீர் உள்ளிட்டவை குறித்து ரோவர் ஆராயும் என்றும், மிகவும் அதிக ரெசல்யூஷன் கொண்ட படங்களையும் அது எடுக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

சந்திராயன் 2 லேண்டிங் குறித்தான லைவ் அப்டேட்ஸ்:

Sep 07, 2019 02:43 (IST)
நம் விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம். அவர்கள் வரலாற்றைப் படைத்துள்ளார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்
Sep 07, 2019 02:39 (IST)
நாட்டுக்கும் மனித குலத்துக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகப் பெரிய சேவை செய்துள்ளனர்: மோடி பேச்சு

Sep 07, 2019 02:30 (IST)
உங்களோடு நான் இருக்கிறேன்- பிரதமர் மோடி

இந்த நாடு உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறது. இந்த நாட்டுக்கும் மனித குலத்துக்கும் நீங்கள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளளீர்கள். உங்கள் முயற்சி தொடரும். உங்களோடு நாடன் இருக்கிறேன்- பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல்
Sep 07, 2019 02:25 (IST)
இது ஒரு சாதாரண மைல்கல் அல்ல: பிரதமர் மோடி
Sep 07, 2019 02:24 (IST)

BREAKING: நிலவின்மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோமீட்டர்தொலைவுஇருக்கும்போதுவிக்ரம்லேண்டருடனானதொடர்பைஇழந்ததுஇஸ்ரோ - ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல்

Advertisement
Sep 07, 2019 02:19 (IST)
BREAKING: விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்
Sep 07, 2019 02:18 (IST)
விக்ரம் லேண்டரிடமிருந்து அதிகாலை 1:55 மணிக்குப் பிறகு தரவுகள் வரவில்லை
Sep 07, 2019 02:09 (IST)
மிகவும் பரபரப்பான கட்டத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், பிரதமர் மோடியிடம் திட்டம் குறித்து விளக்குகிறார்.

Sep 07, 2019 02:03 (IST)
BREAKING: சந்திராயன் 2 லேண்டரிடமிருந்து சிக்னலை எதிர்நோக்கி காத்திருக்கிறது இஸ்ரோ
Sep 07, 2019 02:01 (IST)
லேண்டர் விக்ரம் எப்படி நிலவில் தரையிறங்கியது என்பதை விளக்கும் படம்

Sep 07, 2019 01:59 (IST)

BREAKING: சந்திராயன் 2, இன்னும்சிலகணங்களில்நிலவில்தரையிறங்கஉள்ளதால்இஸ்ரோதலைமையகத்தில்மிகவும்பரபரப்பானசூழல்காணப்படுகிறது.

Sep 07, 2019 01:56 (IST)

BREAKING: நிலவில்தடம்பதிக்கஇருக்கும்விக்ரம்லேண்டர் 'ரஃப்பிரேக்ககிங்'-ஐகடந்தது

Sep 07, 2019 01:53 (IST)

Breaking: இன்னும் 4 நிமிடத்தில் சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கும்

Sep 07, 2019 01:48 (IST)
சந்திராயன் 2 லேண்டிங்: ‘வரலாறு படைக்கப்படுவதைக் காணுங்கள்’- பிரதமர் மோடி ட்வீட்!
Sep 07, 2019 01:36 (IST)
இஸ்ரோ தலைமையகத்தில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!


Sep 07, 2019 01:28 (IST)
அமேசான் நிறுவனம் மற்றும் ப்ளூ ஒரிஜின் சி.இ.ஓ ஜெப் பெசோஸ், சந்திராயன் 2 திட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர், 'குட் லக் இந்தியா' என்று தெரிவித்துள்ளார்.


 


Sep 07, 2019 01:13 (IST)
பிரக்யான் ரோவர் எப்படி இயங்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


Sep 07, 2019 00:55 (IST)
பிரதமர் நரேந்திர மோடி, சந்திராயன் 2 தரையிறக்கத்தை, சுமார் 70 பள்ளிக் குழந்தைகளுடன் நேரலையில் பார்ப்பார்.

Sep 07, 2019 00:52 (IST)
“பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போல…”

"திடீரென்று ஒருவர் பிறந்த பச்சிளம் குழந்தையை உங்கள் கையில் கொடுப்பது போன்றது. அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க வேண்டுமல்லவா. அது அங்கும் இங்கும் நகரப் பார்க்கும். அதேபோலத்தான் சந்திராயன் 2-வில் இருக்கும் லேண்டரும். அது, அங்கும் இங்கும் அலைபாயும். ஆனால், அதை ஸ்திரமாக தரையிறக்க வேண்டும்" என்று இந்தியாவின் மிகப் பெரும் பெருமையாக கருதப்படும் சந்திராயன் 2 திட்டம் குறித்து விளக்குகிறார் இஸ்ரோ தலைவர் கே.சிவன்.
Sep 07, 2019 00:50 (IST)
லேண்டர் விக்ரம் ஏன் ‘இன்டலிஜன்ட்’- விளக்குகிறார் இஸ்ரோ விஞ்ஞானி

இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திராயன் 2-வின் விக்ரம் லேண்டர், பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்படும் என்று இஸ்ரோ-வின் மூத்த விஞ்ஞானி கூறுகிறார்.



Advertisement