This Article is From Sep 07, 2019

Chandrayaan 2-ன் 5% மட்டுமே தோல்வி, ஆர்பிட்டார் நிலவின் படங்கள் எடுக்கும்: ISRO

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதும், சந்திர சுற்றுப்பாதையில் அதன் செருகலும் இந்தியாவின் மலிவான விண்வெளி திட்டத்தின் வெற்றிக்கான ஒரு சான்றாக கருதப்படும்.

Chandrayaan 2-ன் 5% மட்டுமே தோல்வி, ஆர்பிட்டார் நிலவின் படங்கள் எடுக்கும்: ISRO

சந்திரயான் 2 பணி சுமார் 140 மில்லியன் டாலர் குறைந்த செலவில் இருந்தது.

ஹைலைட்ஸ்

  • சந்திரயன் 2 ஆர்பிட்டார் ஒரு வருடம் சந்திரனின் படங்களை எடுக்கும்
  • இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு சான்றாக இது காணப்படுகிறது
  • சந்திரயான் 2 அதன் குறைந்த விலை காரணமாக தனித்து நிற்கிறது
Bengaluru:

Chandrayaan 2: சந்திரனில் தரையிறங்க இந்தியாவின் முதல் முயற்சி திட்டத்திற்கு மாறாக போயிருக்கலாம், ஆனால் சந்திரயான் 2 பணி இலக்கு தோல்வியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. ஒரு வருட பணி வாழ்க்கையுடன், சந்திரயான் 2 ஆர்பிட்டார் செயல்பாட்டில் உள்ளது, இது சந்திரனை தூரத்திலிருந்து தொடர்ந்து ஆராயும்.

"விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யன் ரோவர் - பயணத்தில் 5 சதவிகிதம் மட்டுமே இழந்துவிட்டது - மீதமுள்ள 95 சதவிகிதம் - அதாவது சந்திரயன் 2 ஆர்பிட்டார் - சந்திரனை வெற்றிகரமாக சுற்றுகிறது" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் அதிகாரி செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-க்கு தெரிவித்துள்ளார்.

ஆர்பிட்டார் நிலவின் பல படங்களை எடுத்து அடுத்த ஆண்டு இஸ்ரோவுக்கு அனுப்பலாம். ஆர்பிட்டார் அதன் நிலையை அறிய லேண்டரின் படங்களை எடுக்க முடியும் என்று இஸ்ரோ அதிகாரி மேலும் கூறினார். லேண்டருக்குள் இருந்த ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே.

பிரம்மாண்டமான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டதும், சந்திர சுற்றுப்பாதையில் அதன் செருகலும் இந்தியாவின் மலிவான விண்வெளி திட்டத்தின் வெற்றிக்கான ஒரு சான்றாக கருதப்படும். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு நகரும் ரயிலில் இலக்கை மற்றொரு நகரும் ரயிலில் இருந்து வெற்றிகரமாக சுடுவதை போன்றது என்று இந்த சாதனை நிபுணர்களால் ஒப்பிடப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 பணி சுமார் 140 மில்லியன் டாலர் என்ற குறைந்த செலவில் இருந்தது. அமெரிக்கா தனது அப்பல்லோ பணிக்காக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்தது. இதனை ஒப்பிடுகையில், செவ்வாய் கிரகம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி ஆய்வு பணிகளுக்கும் இந்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சனிக்கிழமையன்று, சந்திர தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு சந்திரன் லேண்டர் விக்ரமுடன் தொடர்பு இழந்தது. ஒரு வெற்றிகரமான தரையிறக்கம் இந்தியாவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கும் நான்காவது நாடாக மாற்றியிருக்கும். இஸ்ரோ மிஷன் கட்டுப்பாட்டு அரையிலிருந்து இந்த நடவடிக்கையை கவனித்த பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள் "நம்பிக்கையை இழக்க வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்.

ஆனால் அதிகாலை 1:55 மணியளவில் எதிர்பார்க்கப்பட்ட தரையிறக்கத்திற்கான பல பதட்டமான நிமிடங்களைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் கே சிவன், லேண்டருடன் தொடர்பு இழந்துவிட்டதாக அறிவித்தார்.

இது ஒரு சிக்கலான சூழ்ச்சி என்று இஸ்ரோ தரையிறங்குவதற்கு முன்பு ஒப்புக் கொண்டது, டாக்டர் சிவன் "கடைசி 15 நிமிட பயங்கரமானது" என்று குறிப்பிட்டார்.

" இது திடீரென்று யாரோ ஒருவர் வந்து உங்கள் கையில் புதிதாகப் பிறந்த குழந்தையைத் தருவது போன்றது. சரியான ஆதரவு இல்லாமல் உங்களால் அந்த குழந்தையை பிடிக்க முடியுமா? குழந்தை இந்த வழி, அந்த வழி என மாறி மாறி நகரும், ஆனால் நாம் அதன் கைகளை வீடாமல் பிடித்திருக்க வேண்டும்," என்று அவர் என்டிடிவிக்கு தெரிவித்திருந்தார்.

(With inputs from agencies)

.