This Article is From Jul 24, 2019

சந்திராயன் -2 விண்கலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவை சென்றடைகிறது

புவி வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு நிலவின் வட்டப்பாதையை நோக்கி இன்று தனது பயணத்தை தொடங்கியது ஆகஸ்ட் 14-ந்தேதி நிலவை நோக்கி சந்திராயன் -2 புறப்படும். ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சந்திரயான் -2 நிலவை சென்றடையும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன் -2 விண்கலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவை சென்றடைகிறது

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-தேதி மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது

Chennai:


சந்திரயான் -2 விண்கலம் ஆகஸ்ட் 20 தேதி நிலவை சென்றடையும் என்று இஸ்ரோ இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 திட்டத்தை  செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதி நவீன வசதிகளுடன் ரூ. 604 கோடியில் சந்திராயன் -2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை ஜிஎஸ் எல்வி மார்க் 3 ராக்கெட்  மூலம் ஜூலை 15-ம் தேதி திங்கள்கிழமை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், புறப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் தொழில்நுட்ப கோளாறு காராணமாக ராக்கெட்டை ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

சந்திரயான் -2 விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தின் இருந்து ஜிஎஸ் எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-தேதி மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் புவி வட்டப்பாதையில் இருந்து  விடுபட்டு நிலவின்  வட்டப்பாதையை நோக்கி இன்று தனது பயணத்தை தொடங்கியது ஆகஸ்ட் 14-ந்தேதி நிலவை நோக்கி சந்திராயன் -2 புறப்படும். ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சந்திரயான் -2 நிலவை சென்றடையும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.