சந்திராயன்-2 அதிகாலை 1.55 மணி அளவில் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது.
New Delhi: சந்திரயான்-2 இன்று இரவு நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மொத்த உலகமும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஹெவி-லிப்ட் ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி மார்க்-3ல் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து, சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. இன்று நள்ளிரவில் 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது.
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்கும் இந்தியாவின் 2வது மிகப்பெரிய செயல்திட்டமாகும். சந்திராயன்-2 நிலவில் தரையிரங்கும் அந்த பதபதைக்கும் தருணங்களை பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக பார்வையிட உள்ளார். அவருடன் 60 பள்ளி மாணவர்களும் இந்த காட்சிகளை காண்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய தருணத்தை நீங்களும் உங்கள் வீட்டில் இருந்த படியே உங்களது தொலைக்காட்சியிலோ, மொபைல் போனிலோ, கணிணியிலோ நேரலையாக காணலாம்.
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை எப்போது பார்க்கலாம்:
சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவியானது, நள்ளிரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரை இறங்க உள்ளது இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை எப்படி பார்ப்பது:
NDTV தொலைக்காட்சியில் நீங்கள் சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவது குறித்த உடனடி தகவல்களை பார்க்கலாம். அதற்கான செட்டாப் பாக்ஸ் நண்பர்கள்,
TATA SKY: 604
DISH: 761
DEN: 368
AIRTEL: 369
HATHWAY: 252
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை நேரலையில் பார்க்க:
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை NDTV வாயிலாக நீங்கள் நேரடியாக பார்க்கலாம். NDTV English Channel,NDTV Hindi Channel
மேலும், உடனடி தகவல்களை ndtv.com, https://www.ndtv.com/tamil தெரிந்துகொள்ளலாம்.
இதனை இஸ்ரோவின் யூ-டியூப் சேனலில் 1.10 முதல் பார்க்கலாம். ISRO YouTube channel,
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை குறித்த தகவல்களை சமூகவலைதளங்கள் மூலம் தெரிந்துக்கொள்ள;
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை குறித்த தகவல்களை NDTV-யின் அதிகார்ப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பார்க்கலாம். @ndtv
இதேபோல், NDTV-யின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பார்க்கலாம்.Facebook and Instagram
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை மொபைல் ஆப் மூலம் பார்க்க
சந்திராயன்-2 நிலவில் தரையிரங்குவதை NDTV-யின் மொபைல் ஆப் மூலம் பார்க்கலாம். NDTV-விக்கு இரண்டு ஆப்கள் உள்ளன. NDTV-ஆப் மற்றும் NDTV Lite app உள்ளிட்டவை மூலம் தெரிந்துகொள்ளலாம்.NDTV app NDTV Lite app.