This Article is From Aug 22, 2018

சந்திராயன் மூலம் நிலாவில் உள்ள உறைந்த நீரை உறுதி செய்த நாசா: 10 ஃபேக்ட்ஸ்

இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலத்தின் உதவியுடன் நிலாவில் உறைந்த தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது

சந்திராயன் மூலம் நிலாவில் உள்ள உறைந்த நீரை உறுதி செய்த நாசா: 10 ஃபேக்ட்ஸ்
New Delhi:

இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலத்தின் உதவியுடன் நிலாவில் உறைந்த தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. இந்தியா சார்பில் இஸ்ரோ மூலம் கடந்த 2008 ஆம் ஆண்டு, நிலாவுக்கு முதன்முறையாக அனுப்பிவைக்கப்பட்ட விண்கலம் தான் சந்திராயன் 1. இந்நிலையில் நாசாவின் எம்3 இன்ஸ்ட்ரூமன்ட், சந்திராயன் 1-ல் இருந்த தரவுகளை எடுத்து ஆய்வு செய்ததில் இந்த புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

நிலாவின் துருவங்களுக்குப் பக்கத்தில் இந்த உறைந்த நீர் இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு சூரிய வெளிச்சம் படாததால், நீர் உறைந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலாவின் மேற்பரப்பிலேயே உறைந்த நீர் இருப்பதால், அங்கு போதுமான நீர் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் எதிர்காலத்தில் தொடர் ஆய்வுகளை நிலாவில் தங்கியே செய்ய முடியும் என்று நாசா கருத்து தெரிவித்துள்ளது. 

இந்த உறைந்த நீர் என்பது பல காலமாக அங்கு இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

எம் 3-யில் இருந்து கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் நிலாவில் இருக்கும் நீரை மையப்படுத்தி ஒரு மேப் உருவாக்கப்பட்டது. 

சந்திராயன் 1-ல் இருந்து தரவுகள் பெறப்பட்ட அடுத்த நாள் நாசாவின் ஜிம் பிரைடண்ஸ்டெய்ன், ‘பல பில்லியன் டன்கள் அளவு கொண்ட உறைந்த நீர் நிலாவில் இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், விஞ்ஞானிகள் பல காலம் நிலாவில் தண்ணீர் இல்லை என்றுதான் கருதி வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அங்கு நீர் இருப்பதற்கான பல தரவுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

சந்திராயன் 1-ன் மூலம், நிலாவின் மேற்பரப்பிலும், மேற்பரப்புக்கு சற்றுக் கீழே இருக்கும் இடங்களிலும் நீர் இருக்கிறதா என்பதை அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி, சந்திராயன் 1-ல் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. இதையடுத்து, சந்திராயனிலிருந்து ரேடியோ சிக்னல்கள் வருவது தடைபட்டது. சிறிது காலம் கழித்து, இஸ்ரோ, சந்திராயன் 1 மிஷன் முடிவுக்கு வந்ததாக அறிவித்தது. 

அதேபோல 2016 ஆம் ஆண்டு நாசா, லூனார் ஆர்பிட்டில் இருக்கும் சந்திராயன் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயன்றது. தொடர்ந்து 3 மாதங்கள் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சந்திராயன் 1-ன் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

.