Read in English
This Article is From Apr 09, 2019

கன்னியாஸ்திரீ பாலியல் வன்புணர்வு வழக்கில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது

கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் முதன் முறையாக வன்புணர்வு குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா

கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Thiruvananthapuram:

கேரளா போலீஸார், கன்னியாஸ்திரீகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜலந்தர் முன்னாள் ஆயர் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பிஷப் முல்லக்கல் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் முதன் முறையாக வன்புணர்வு குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு குறித்து ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு விசாரணை குழுவினர் கேரளாவில் உள்ள பாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்புணர்வு, அச்சுறுத்தல், இயற்கைக்கு மாறான பாலியல், அடைத்து வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பிஷப் முல்லக்கல் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

முல்லக்கல்லுக்கு எதிராக குற்றம் சாட்டிய  கன்னியாஸ்திரிகள் கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்தனர். அவர்கள் “தீவிர பயத்தில் வாழ்கிறோம்” என்று தெரிவித்தனர். ஆதாரங்களை டிசம்பர் முதலே தாக்கல் செய்து விட்டோம் என்றும் கூறினார்கள். 

Advertisement

 பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீகள் மேல்முறையீடு செய்தனர். தாங்கள் மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதாக  பல்வேறு நாட்டின் பகுதிகளுக்கு புகார் கடிதங்களை கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு அனுப்பி வைத்தனர். “இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றி தனிமைப்படுத்த முயன்றனர். சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கன்னியாஸ்திரி அனுபமா கூறினர். 

பிஷப் முல்லக்கல் 2014 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் 14 சந்தர்ப்பங்களில் மிரட்டி வன்புணர்வு செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியான குரியக்கோஸ்  இறந்து காணப்பட்டார். 

Advertisement
Advertisement