This Article is From Aug 31, 2018

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்!

செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்!

சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சென்னை, போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இப்படி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்ததால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால், இதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.