This Article is From Nov 10, 2018

இளைஞர்களை மையப்படுத்தி சத்தீஸ்கரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை

முதல்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளில் சனிக்கிழமையுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது.

இளைஞர்களை மையப்படுத்தி சத்தீஸ்கரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை

பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெளியிடுகிறார்.

Raipur:

சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.

இதனை பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா வெளியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளில் திங்களன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சனிக்கிழமையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அடுத்த கட்டமாக மீதம் உள்ள 72 தொகுதிகளில் வரும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில வேளாண் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் கூறுகையில், தேர்தல் அறிக்கை முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2025-ல் நாட்டிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக சத்தீஸ்கர் மாறும். இதற்கு அடித்தளமாக பாஜகவின் தேர்தல் அறிக்கை அமையும் என்று தெரிவித்தார்.

.