Read in English
This Article is From Sep 15, 2018

மேக்-அப் பொருட்களால் ஹார்மோன் பாதிப்பா? பகீர் தகவல்

18 முதல் 44 வயதுடைய 143 பெண்களின் சிறுநீர் மாதிரைகளை ஆய்வு செய்ததில், உடல் ஹார்மோன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Advertisement
Health

மேக்-அப் பொருட்களால் ஹார்மோன் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்

அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் உடல் ஹார்மோன்களை பாதிப்படைய செய்கிறது என்ற சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

18 முதல் 44 வயதுடைய 143 பெண்களின் சிறுநீர் மாதிரைகளை ஆய்வு செய்ததில், உடல் ஹார்மோன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் காரணமாக இருக்க கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிக கெமிக்கல்ஸ் உடைய மேக்-அப் பொருட்களினால் பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் பொல்லாக் தெரிவித்துள்ளார்.

அழகு சாதன பொருட்களில் உள்ள பாராபென், உடலில் உள்ள ஈஸ்ட்ரஜென் அளவை குறைத்துவிடுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த பாதிப்புகள் குறித்து அடுத்தக்கட்ட ஆய்வு நடத்த உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement