Read in English বাংলায় পড়ুন
This Article is From Mar 01, 2020

சென்னை மாதவரத்தில் தீ விபத்து - 100 கோடி மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசம்

மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

Advertisement
இந்தியா

"மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன அடிப்படையிலான பொருளின் கோடவுனில் நடந்துள்ளது"

Highlights

  • 100 கோடி மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசம்
  • சென்னை மாதவரத்தில் தீ விபத்து
  • 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்
New Delhi:

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் கடந்த சனிக்கிழமை பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. 500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் இந்த தீயை அணைக்க முயற்சித்து வருவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து "மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன அடிப்படையிலான பொருளின் கோடவுனில் நடந்துள்ளது"  என்று மூத்த தீயணைப்பு அதிகாரி சைலேந்திர பாபு ஏ.என்.ஐ-யிடம் கூறினார்.
 

500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 26 தீயணைப்பு வாகனங்கள் 6 நுரை பீச்சும் வாகனங்கள் இந்த தீயணைப்பு பணியில் உள்ளன என்றும், மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த தீ விபத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்களும் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் உயர் அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த தீயை அணைக்க சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உதவியதாகவும் அந்த அதிகாரி கூறினார். இந்த தீவிபத்தில் யாரேனும் காயமடைந்துள்ளனரா என்ற விபரம் தெரியவில்லை. 

Advertisement