அவர் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பிருப்பதாக காவல் துறை சந்தேகிக்கிறது.
Chennai: சென்னையின் கோதாரி சாலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரபல கார் டீலர் ரீட்டா லங்காலிங்கத்தின் வீடு. இல்லத்தில் இருக்கும் தனது அறைக்கு நேற்றிரவு சென்ற அவர், இன்று காலை 9 மணி வரையில் வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்தால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தள்ளார் 49 வயதாகும் ரீட்டா.
கார் டீலர்ஷிப் செய்யும் லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்-பர்சன் ரீட்டா. அவர் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பிருப்பதாக காவல் துறை சந்தேகிக்கிறது.
லேன்சன் டொயோட்டாவின் நிர்வாக இயக்குநரும், ரீட்டாவின் கணவருமான லங்காலிங்கம் முருகேசுவுக்கும் அவருக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் மீதான பிரச்னையில் இருவருக்கும் இடையில் பிரச்னை எழுந்துள்ளது.
“கணவருடனான பிரச்னைதான் ரீட்டாவின் இந்த முடிவுக்குக் காரணமாக தெரிகிறது” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார்.
நேற்றிரவு ரீட்டாவின் கணவர் வீட்டுக்கு வராமல் ஓட்டலில் இரவைக் கழித்துள்ளார் என்று போலீஸ் தரப்பு சொல்கிறது. தற்கொலைக்கான எந்த கடிதமும் கிடைக்கவில்லை என்று கூறும் போலீஸ் தரப்பு, ரீட்டாவின் பிரேதப் பரிசோதனை சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
ரீட்டா, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.