This Article is From Jun 18, 2019

சென்னையில் 'பஸ் டே' கொண்டாடி அலப்பரை செய்யும் கல்லூரி மாணவர்கள்! பொதுமக்கள் அச்சம்!!

சென்னை மாநகர பேருந்துகளின் கூரை மீதேறி கல்லூரி மாணவர்கள் பஸ்டே-வை கொண்டாடி வருகின்றனர். இது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் பஸ்டே கொண்டாடி வரும் மாணவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

சென்னையில் 'பஸ் டே' கொண்டாடி அலப்பரை செய்யும் கல்லூரி மாணவர்கள்! பொதுமக்கள் அச்சம்!!

பஸ்டே கொண்டாடும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chennai:

சென்னையில் பஸ் டே என்ற பெயரில் மாநகர பேருந்துகளின் மீதேறி கல்லூரி மாணவர்கள் அலப்பரை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அட்டூழியத்தில் ஈடுபடும் மாணவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. 

குறிப்பாக ஆவடியில் இருந்து - அண்ணா சதுக்கம் செல்லும் 40 ஏ பேருந்தின் கூரை மீதேறி கல்லூரி மாணவர்கள் குதிக்கத் தொடங்கினர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில், பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடையே, பஸ்டே கொண்டாடும் மாணவர்கள் பஸ்ஸில் இருந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 


குறிப்பிட்ட பஸ் ரூட்டில் வரும் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'பஸ் டே' -யை கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ஆனால் சமீப காலமாக, மக்களுக்கு தொந்தரவு தரும் நிகழ்வாக பஸ் டே மாறி வருகிறது. இந்த நிகழ்வின்போது, பஸ்ஸை மெதுவாக இயக்குமாறு டிரைவரை மாணவர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது. 

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பஸ் டேவை கட்டுப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். 
 

.