This Article is From Apr 09, 2019

எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

புதிய பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டு நடைமேடையில் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்று அதிமுக நீண்ட காலமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இதேபோல் தமிழக அரசின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் பேசும் போது, இந்த கோரிக்கையை ஏற்று, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. பின்னர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 'புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல, பயணச்சீட்டு, ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட அனைத்திலும் , ஓரிரு நாட்களில் பெயர் மாற்றப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement