This Article is From Feb 04, 2019

சென்னையில் சோகம்! - பிறந்தநாள் அன்று துப்பாக்கியில் சுட்டு காவலர் தற்கொலை!

சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் மணிகண்டன் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் சோகம்! - பிறந்தநாள் அன்று துப்பாக்கியில் சுட்டு காவலர் தற்கொலை!

காவலர் மணிகண்டன் சிறப்பு காவல்படை பிரிவை சேர்ந்தவர்.

Chennai:

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் சென்னை ஆவடி வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3-ம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது 27-வது பிறந்த நாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று காலை வழக்கம் போல், சென்னை கீழ்ப்பாக்கம் சிறப்புக் காவல்படை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். காலை 5 மணி முதல் 8 மணி வரை அவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலை 5.15 மணி அளவில் மணிகண்டன் பணியிலிருந்த இடத்திலிருந்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து கீழ்பாக்கம் போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, மணிகண்டன் துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டாவை நிரப்பி தனக்குத்தானே வலது பக்க காதில் வைத்துசுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

.