This Article is From Jul 17, 2020

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேர் டிஸ்சார்ஜ் - ஜூலை 17 மண்டலவாரி விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65,748 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேர் டிஸ்சார்ஜ் - ஜூலை 17 மண்டலவாரி விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,077 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இதுவரை கொரோனா தொற்றுடைய 65,748 பேர் மீண்டு வந்துள்ளனர்
  • நேற்று ஒரே நாளில் 1,712 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படனர்
  • தற்போது 15,038 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்

தமிழகத்தில் நேற்று 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,157 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,56,369 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5106 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,07,416 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,714 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,236 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (17.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 614

மணலி - 209

மாதவரம் - 419

தண்டையார்பேட்டை - 848

ராயபுரம் - 1,141

திரு.வி.க நகர் - 1,039

அம்பத்தூர் - 927

அண்ணா நகர் - 1,553

தேனாம்பேட்டை - 1,432

கோடம்பாக்கம் - 2,077

வளசரவாக்கம் - 744

ஆலந்தூர் - 476

 அடையாறு - 1,017

பெருங்குடி - 331

சோழிங்கநல்லூர் - 377

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,834

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65,748 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 80 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,341 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 15,038 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,712 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,077 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திலும்  முறையே 1,553 மற்றும் 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 209 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 


 

.