This Article is From Jul 04, 2018

காவல் துறையினரை தாக்கிய குற்றவாளி மீது என்கவுண்டர்

சில மாதங்களாக தமிழ்நாட்டில் காவல் துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது

காவல் துறையினரை தாக்கிய குற்றவாளி மீது என்கவுண்டர்
Chennai:

சென்னை: போலீசாரை தாக்கிய குற்றவாளியை, தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்தது, சென்னை காவல் துறை.

சென்னை கிண்டி அருகே, குற்றப் பதிவுள்ள ஆனந்தன் என்பவரை கைது செய்யும் முயற்சியில் இருந்தனர் காவல் துறையினர். அப்போது விசாரணை நடத்த சென்ற காவல் துறையினரை ஆனந்தன் தாக்கியதால், 16 வெட்டு காயங்களுடன் கான்ஸ்டபிள் ராஜவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல் துறையின் மற்றொரு பிரிவினர் குற்றவாளி ஆனந்தனை கைது செய்ய மீண்டும் சென்றனர். அப்போது, துணை ஆய்வாளர் இளையராஜாவை அவர் தாக்க முயற்சித்துள்ளார். எனவே, தற்காப்பு கருதி துப்பாக்கி சூடு உத்தரவை கையில் எடுத்திருக்கிறார் ஆய்வாளர். "குற்றவாளியிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ளவே துணை ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தினார்" என்று உயர் அதிகாரி ஒருவர் இதுப்பற்றி தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் காவல் துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மே மாதம் தூத்துக்குடியில் நடைப்பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், காவல் துறையினரின் நடத்திய துப்பாக்கி சூட்டால் 12 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தில், காவல் துறையினரும் தாக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

 

.