ரூபிக் க்யூப் புதிரினை 2 நிமிடம் 7 நொடிகளில் கண்ணை கட்டிக் கொண்டு செய்து சாதனை படைத்தார்
Chennai: சென்னையைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி சாரா ரூபிக் க்யூப் புதிரினை 2 நிமிடம் 7 நொடிகளில் கண்ணை கட்டிக் கொண்டு செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க முயன்றார்.
சாரா பள்ளி சீருடை அணிந்தபடி கண்களை கட்டியபடி கனசதுரத்தை வைரமுத்துவின் கவிதை போல 2 நிமிடம் 7 வினாடிகளில் முடித்துவிட்டார். சாராவின் தந்தையி ஏ.என்.ஐயிடம் பேசியபோது சாரா சிறு வயதிலேயே புதிர்களை தீர்க்கத் தொடங்கினார். அதைக்கண்டு முறையான பயிற்சி அளித்தோம். தற்போது அவளால் பலவகையான க்யூப்ஸ் தீர்க்க முடியும் என்று கூறினார்.
சாரா புன்னகையுடன் “இது போன்ற ஒரு நிகழ்வில் ஒருபகுதியாக இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.
ரூபிக்ஸ் க்யூப்பினை 1974 ஆம் ஆண்டில் ஹங்கேரிய கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் கண்டுபிடித்து உரிமம் பெற்றார்.