தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய கஜா புயலில் சிச்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் சாய்ந்த நிலையில், நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு நிவாரண பணிகளை விரைவுபடுத்தியுள்ளார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிவாரண பணிகள் தொடர்பான வழக்கொன்று இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் போர்க்கால அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் ஆகிய புயல் பாதிப்பு மாவட்டங்களில் நிவாரண பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நாளை மறுதினம் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.