வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பேரி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், பரிசுத் தொகை வழங்குவதால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஏற்கனவே மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்திற்கு கடன் சுமை அதிகமாக உள்ளது.
தமிழகத்திற்கு கடன் ரூ. 3,55,845 கோடி கடன் உள்ளது. ஆனால் வரி வருமானம் மூலம் ரூ. 1,12,616 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. எனவே வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.