Read in English
This Article is From Sep 15, 2018

சென்னை புழல் சிறையில் டிவி-யை பயன்படுத்தி செல்போன் சார்ஜ் ஏற்றிய கைதிகள்

யு.எஸ்.பி. போர்ட்டை பயன்படுத்தி செல்ஃபோன் சார்ஜ் ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 18-டிவிக்களை சிறை நிர்வாகம் நீக்கியுள்ளது.

Advertisement
நகரங்கள்

சிறைக்குள் சீருடை அணியாமல் சொந்த உடைகளை அணிந்துள்ள கைதிகள்

Chennai:

சென்னை புழல் சிறையில் ஏ கிளாஸ் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள டிவி மற்றும் எஃப்.எம். ரேடியோக்களை பயன்படுத்தி யு.எஸ்.பி. போர்ட் வழியாக சிறைக் கைதிகள் தங்களது செல்ஃபோனுக்கு சார்ஜ் ஏற்றியுள்ளனர். இதுபற்றி அறிந்த சிறை நிர்வாகத்தினர் 18 டிவி-க்களை நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில், “கைதிகள் சார்ஜ் ஏற்றியது தெரிய வந்ததும் டீவி-க்களை நீக்கியுள்ளோம். இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததும் டீவி மீண்டும் பொருத்தப்படும். சமீபத்தில் சிறையில் நடத்திய ஆய்வில் 7 செல்ஃபோன்களை பதிவு செய்துள்ளோம். டிவிக்களை சிறையில் பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல் அல்ல. விதிகளின்படிதான் இந்த வசதியை செய்துள்ளோம் என்றனர்.

புழல் சிறை தொடர்பாக சமீபத்தில் பல தகவல்கள் வெளிவந்தன. சிறை வார்டன் ஒருவர் வளாகத்திற்குள்ளேயே கஞ்சா கடத்தியுள்ளார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைதிகள் சீருடை அணியாமல் தங்களது சொந்த உடைகளை அணிந்து உல்லாசமாக இருந்ததை பத்திரிகை ஒன்று புகைப்படங்களுடன் செய்தியை வெளியிட்டது. ஆனால் ஏ கிளாஸ் கைதிகளுக்கு இத்தகைய வசதிகள் உண்டு என்று சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

நாட்டின் நவீன சிறைகளில் சென்னை புழல் சிறையும் ஒன்று. இது 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் கைதிகளை அடைக்க முடியும்.

சிறைக்குள் போதை பொருட்களை விநியோகிப்பது என்பது நாடு முழுவதும் நடந்து வருகிறது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் 21 மொபைல் ஃபோன்களை கடந்த மே மாதம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பீகாரின் முசாபர்பூர் மற்றும் பேட்டியா சிறைகளில் புகையிலை, கத்திகள், சார்ஜர், செல்ஃபோன் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
Advertisement