This Article is From Dec 24, 2019

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மக்களே… அடுத்த 2 நாட்களுக்கு இருக்கு ‘மழை சர்ப்ரைஸ்’!

Rain for Chennai - “கிறிஸ்துமஸ் வரவுள்ளதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று மழை பெய்ய உள்ளது. தற்போது வரும் திடீர் மழையை அனுபவியுங்கள்"

Advertisement
தமிழ்நாடு Written by

"புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் முதல் புதுச்சேரி வரை மழை பெய்யும்."

Rain for Chennai - சென்னை நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

“கிறிஸ்துமஸ் வரவுள்ளதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்று மழை பெய்ய உள்ளது. தற்போது வரும் திடீர் மழையை அனுபவியுங்கள். புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் முதல் புதுச்சேரி வரை மழை பெய்யும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மட்டுமல்ல நாளையும் மழை தொடரும். இந்த முறை கிறிஸ்துமஸ் மழையோடு கடக்க வாய்ப்பிருக்கிறது,” என்று மகிழ்ச்சித் தகவலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். 

தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனைத்தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement