This Article is From Nov 28, 2019

“இது சும்மா டிரெய்லர் தான்…”- அடுத்தடுத்து Chennai-க்கு கனமழை… Tamilnadu Weatherman அப்டேட்!

Tamilnadu Weatherman rain update - "இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே நல்ல மழை பொழிவு இருக்கும்"

“இது சும்மா டிரெய்லர் தான்…”- அடுத்தடுத்து Chennai-க்கு கனமழை… Tamilnadu Weatherman அப்டேட்!

Tamilnadu Weatherman rain update - "தமிழக கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை, சிறிய மழை மேகங்கள் நிலப்பரப்பை நோக்கி நகரும் என்பதால், ஆங்காங்கே திடீர் மழையை எதிர்பார்க்கலாம்"

Tamilnadu Weatherman rain update - வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நவம்பர் மாதம் சென்னைக்கு (Chennai) சொல்லிக்கொள்ளும் அளவு மழை பெய்யவில்லை. அக்டோபரில் பெய்த அளவைவிட நவம்பர் மாதம் குறைவான மழை பொழிவே இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது மழை (Heavy rain). இது வெறும் தொடக்கம்தான் என்றும் இனி வரும் நாட்களில் அதிக மழை இருக்கும் எனவும் பிரபல வானிலை கணிப்பாளரான, தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “தென் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நல்ல மழை பெய்துள்ளது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 146 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது வெறும் ஆரம்பம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

kqbnuli

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை வட்டம் மற்றும் மொத்த தமிழகத்துக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளி இருக்கும். 

இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே நல்ல மழை பொழிவு இருக்கும். அதே நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை, சிறிய மழை மேகங்கள் நிலப்பரப்பை நோக்கி நகரும் என்பதால், ஆங்காங்கே திடீர் மழையை எதிர்பார்க்கலாம்,” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

.