This Article is From Jun 04, 2020

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

"கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தின் தேவலாவில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது"

Advertisement
தமிழ்நாடு Written by

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்

கேரளா மற்றும் தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தின் தேவலாவில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 

Advertisement

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் நகரத்தின் சில பகுதிகளில் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement