This Article is From Aug 11, 2018

சென்னை மெட்ரோ ஸ்டேசன்களில் குறைந்த விலையில் ஷேர் கேப், ஷேர் ஆட்டோ அறிமுகம்

அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல் கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை (மவுன்ட்), திருமங்கலம் ஆகிய ஏழு நிலையங்களில் இருந்து ஆட்டோ சேவையைப் பெறலாம்

சென்னை மெட்ரோ ஸ்டேசன்களில் குறைந்த விலையில் ஷேர் கேப், ஷேர் ஆட்டோ அறிமுகம்

ஹைலைட்ஸ்

  • நான்கு ஸ்டேஷன்களில் கார் சேவை. ஏழு ஸ்டேஷன்களில் ஆட்டோ சேவை.
  • ஷேர் ஆட்டோவுக்கு 10 ரூபாயும் ஷேர் டாக்சிக்கு 15 ரூபாயும் கட்டணம் நிர்ணயம்
  • மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் இடங்களுக்கு இச்சேவையைப் பயன்படுத்தலாம்

அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல் கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை (மவுன்ட்), திருமங்கலம் ஆகிய ஏழு நிலையங்களில் இருந்து ஆட்டோ சேவையைப் பெறலாம்.

கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணா நகர் (கிழக்கு), வடபழனி, டிஎம்எஸ் ஆகிய நான்கு நிலையங்களில் இருந்து ஷேர் கேப் வசதியைப் பெறலாம்.

காலை 6:30 மணியில் இருந்து இரவு 9:30 வரை இவ்வாகனங்கள் இயங்கும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிலையத்திலும் இரண்டு கார்களும் இரண்டு ஆட்டோக்களும் மக்களின் பயன்பாட்டுக்காக இயங்கும்.

இதற்காக சென்னைப் புறநகர் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்துடனும் விக்னேஷ் கேப்ஸ் நிறுவனத்துடனும் சென்னை மெட்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரு நாள் ஊதியமாக 1150 ரூபாயும் கார் ஓட்டுநருக்கு 2100 ரூபாயும் கிடைக்கும். நாள்தோறும் பயணிகளின் கட்டணம் மூலம் பெறப்படும் வருமானம் மெட்ரோ நிர்வாகத்துக்குச் செல்லும். வண்டியில் ஏறியவுடன் ஓட்டுநர்கள் பயணிகளிடம் டிக்கட்டுகளை வழங்குவார்கள்.

விரைவில் இதைப் பிரபலப்படுத்த மெட்ரோ நிலையங்களின் நடைபாதைகளில் இதுகுறித்த அறிவிப்புப் பலகைகளைப் பொருத்த மெட்ரோ நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

.