This Article is From Jun 21, 2020

சென்னையில் 40,000ஐ நெருங்கும் கொரோனா! மண்டலவாரியாக முழு விவரம்!!

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,963 மற்றும் தேனாம்பேட்டையில் 4,785 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 560 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 40,000ஐ நெருங்கும் கொரோனா! மண்டலவாரியாக முழு விவரம்!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 31,316 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (20.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,483

மணலி - 560

மாதவரம் - 1,095

தண்டையார்பேட்டை - 4,963

ராயபுரம் – 6,148

திரு.வி.க நகர் - 3,440

அம்பத்தூர் - 1,440

அண்ணா நகர் – 4,142

தேனாம்பேட்டை - 4,785

கோடம்பாக்கம் - 4,329

வளசரவாக்கம் - 1,667

ஆலந்தூர் - 840

அடையாறு - 2,314

பெருங்குடி - 809

சோழிங்கநல்லூர் - 732

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 894

ஜூன் 21 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 39,641 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

.