This Article is From Apr 16, 2020

சென்னையில் தூய்மை பணியாளரை தரக்குறைவாக பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!

தூய்மைப் பணியாளரை சந்திர சேகர் என்பவர் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை அந்த பணியாளர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னையில் தூய்மை பணியாளரை தரக்குறைவாக பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!

பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தூய்மைப் பணியாளர் ஒருவரை முதியவர் தரக்குறைவாக பேசினார்
  • வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது
  • முதியவர் சந்திர சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னையில் தூய்மைப் பணியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த அசாதாரண சூழலில் தூய்மைப் பணியாளர்கள் களத்தில் இறங்கி துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணை ஐஐடி காலனியில் கழிவு நீரை எடுப்பதற்காக, நாராணயபுரம் பகுதியை சேர்ந்த கழிவுநீர் லாரி ஓட்டுனர் மணிகண்டன் என்பவர் சென்றிருந்தார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது முற்றிப்போய் சந்திர சேகர் மணிகண்டனை தரக்குறைவாக பேசியுள்ளார். 

இதனை மணிகண்டன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, பள்ளிக்கரணை போலீசில் மணிகண்டன் கடந்த 10-ம்தேதி புகார் அளித்திருந்தார்.

இதனை விசாரித்த போலீசார் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

.