This Article is From Jun 26, 2019

6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

Chennai weather: சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

கனமழை பெய்ததால் மக்களை வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்திருக்கிறது.

சென்னையில் 6 மாதங்களுக்கு பின்னர் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் கனமழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இன்று காலை முதலே வெப்பம் குறைவாக காணப்பட்டது. கரு மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்த நிலையில் மாலை 5.30-க்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. 

தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், அசோக் நகர், வளசர வாக்கம், ராமாபுரம், கே.கே. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, தரமணி, திருவான்மியூர், எழும்பூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. 

6 மாதங்களுக்கு பின்னர் மழையை பார்த்த மகிழ்ச்சியில் சென்னை மக்கள் திக்கு முக்காடிப் போனார்கள். தொடர்ந்து மழை பெய்தால் ஓரளவு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்பதால் தொடர் மழையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

சென்னையைப் போன்று திருவள்ளூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. 

.