This Article is From Feb 27, 2020

80 ஆண்டுகள் பழமையான மரத்தைப் பாதுகாக்க ரூ. 5 லட்சம் செலவழித்த சென்னை பள்ளி!!

ஏராளமான கிளிகளுக்குப் பள்ளியில் உள்ள மரம்தான் வீடாக உள்ளது. இதனைப் பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். கிளிகளின் சத்தமும், குஞ்சுகளுக்கு அவை உணவூட்டும் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

80 ஆண்டுகள் பழமையான மரத்தைப் பாதுகாக்க ரூ. 5 லட்சம் செலவழித்த சென்னை பள்ளி!!

கிளிகளுக்கு வீடாக இருக்கும் 80 ஆண்டுகள் பழமையான மரம்.

ஹைலைட்ஸ்

  • சென்னை டவுட்டன் பள்ளியில் மரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது
  • பறவைகளுக்கு உணவளிக்க உணவுத்தொட்டி மரத்தில் பொருத்தப்பட்டுள்ளது
  • மரத்தை வெட்ட யாருக்கும் உரிமையில்லை என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
New Delhi:

சென்னையில் டவுட்டன் மேல்நிலைப் பள்ளியில் 80 ஆண்டுகள் பழமையான மரத்தைப் பாதுகாப்பதற்காக ரூ. 5 லட்சத்தைப் பள்ளி நிர்வாகம் செலவு செய்துள்ளது. பராமரிக்கப்பட்ட பின்னர் ஏராளமான கிளி உள்ளிட்ட பறவைகள் இந்த மரத்தில் காணப்படுகின்றன. 

பழமையானது என்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பாக மரம் பலவீனம் அடையத் தொடங்கியது. இதையடுத்து மரத்தைப் பாதுகாக்க முயற்சி மேற்கொண்ட பள்ளி நிர்வாகம் கான்கிரீட் தளத்தைக் கீழே அமைத்து அதன்மேல் ஆதரவாக இரும்பு கூண்டை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பலவீனமடைந்து கொண்டிருந்த மரம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

s5s7q57o

கிளிகளின் இல்லம் என்று மரத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைவர் H.E. வில்கின்ஸ் NDTV க்கு அளித்துள்ள பேட்டியில், 'பள்ளியின் வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது. மரங்கள் மூலம் நமக்கு அதிகளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இது மாணவர்களின் உடல் நலத்திற்கும், அறிவுத் திறனுக்கும் நல்லது. எனவே மரத்தைப் பாதுகாக்க நாங்கள் செய்த செலவு மதிப்புடையது' என்று தெரிவித்தார்.

ஏராளமான கிளிகளுக்குப் பள்ளியில் உள்ள மரம்தான் வீடாக உள்ளது. இதனைப் பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். கிளிகளின் சத்தமும், குஞ்சுகளுக்கு அவை உணவிட்டும் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

71ifm79o

பறவைகளுக்கு உணவளிக்கும் வகையில் உணவு தொட்டியும் மரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு உணவளிக்கும் வகையில் உணவுத் தொட்டியும் இந்த மரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இரும்பு கூண்டின் வழியே ஏறி பறவைகளுக்கு நாம் உணவு அளிக்கலாம்.

கடந்த 2016-ல் சென்னையில் ஏற்பட்ட வர்தா புயலின்போது லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த நிலையில் ஒரு மரத்தைப் பாதுகாக்க லட்சக்கணக்கில் பள்ளி நிர்வாகம் செலவு செய்திருக்கிறது. 

இதனைச் சுற்றுச் சூழலியலாளர்கள் வரவேற்றுள்ளனர். கேர் எர்த் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் கூறுகையில், 'மரங்களைப் பாதுகாக்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்று பள்ளி முயற்சி எடுத்திருப்பது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்' என்றார்.

மரம் பாதுகாக்கப்பட்டது குறித்து தேன் ரோஜா என்ற 11-ம் வகுப்பு மாணவி கூறுகையில், 'மரங்களை வளர்ப்பதற்கு எங்களது பள்ளி அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது எங்களுக்குப் பெருமையான விஷயம். மரங்கள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். மண் அரித்தலையும் மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. நிழல், உறைவிடம் அளிக்கும் மரங்கள் ஏராளமான பறவைகளுக்கு வீடாக இருக்கிறது' என்றார்.

ஐஸ்வர்யா என்ற இன்னொரு மாணவி கூறுகையில், 'நாம் எந்தவொரு மரத்தையும் அழிக்கக்கூடாது. அதற்கு எந்த உரிமையும் நமக்கு இல்லை. சுற்றுச் சூழலுடன் நாம் இணைந்து வாழ வேண்டும். ஒவ்வொரு உயிருக்கும் நாம் வாழ்விடத்தை அளிக்க வேண்டும்' என்றார். 

.