This Article is From Jun 17, 2019

“இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும், கவனமா இருங்க…”- ‘வெதர்மேன்’ அட்வைஸ்

"இந்த மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மற்றும் தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் குறையும்”

Advertisement
தமிழ்நாடு Written by

"சென்னையில் இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும்"

தென்மேற்கு பருவமழையினால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், மாநிலத்தின் பெரும்பான்மை இடங்களில் வெயில் இன்னும் சுட்டெறித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கமே இல்லை. இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான். 

இது குறித்து அவர், “வாயுப் புயலைத் தொடர்ந்து மேக மூட்டம் குறைந்துள்ளது. 

சென்னையில் இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும். புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் வட தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலும் வெயில் அதிகமாக இருக்கும்.

Advertisement

இந்த மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மற்றும் தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் குறையும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisement