This Article is From Dec 30, 2019

ரூ.10-க்கு சென்னையை சுற்றலாம்..! - தமிழக அரசு வெளியிட்ட ‘அட அட’ அறிவிப்பு!

Chennai Tourism - "காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது"

Advertisement
தமிழ்நாடு Written by

Chennai Tourism - "சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்"

Chennai Tourism - ஆங்கிலப் புத்தாண்டு வரவுள்ளதையொட்டி, ‘வாவ்' போடவைக்கும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று, சென்னையில் ஒரேயொரு முறை 10 ரூபாய் பயணச் சீட்டு எடுத்துப் பல்வேறு இடங்களில் சுற்றி வரலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக சுற்றுலாத் துறை. 

“தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம். காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செல்லத்தக்கதாகும்.

சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்,” என்று இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement