This Article is From Jun 25, 2019

சென்னை: ஒரு மணி நேரத்தில் 25000 லிட்டர் மழை நீரை சேகரித்த குடும்பம்!

தண்ணீர் லாரிகளிடம், அதிக பணம் செலவளித்து தண்ணீர் வாங்க வேண்டிய இவர்களின் நிலையை மாற்றி, இந்த குடுத்திற்கு ஒரு கனிசமான தொகையை சேமித்தளித்துள்ளது இந்த மழை.

2020-க்குள் நிலத்தடி நீர் வற்றிப்போகும் ஊர்கள் பட்டியிலில் சென்னையும் உள்ளது

Chennai:

சென்னை ஐடி காரிடார் பகுதியின் சபரி டெரஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் இந்த கோடா குடும்பம் வசித்து வருகிறது. மொத்தம் 59 உறுப்பினர்களை கொண்டுள்ளது இந்த குடும்பம். சென்னை நகரின் அந்த பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று பெய்த மழையின்போது, அந்த குடியிருப்பு வளாகத்தில் 25000 சதுர அடி மேற்க்கூரையின் வாயிலாக சுமார் 30 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேகரித்துள்ளனர். மேலும், அவர்கள் வசிக்கும் அந்த பகுதிக்கு மாநகரத்தின் குழாய் தண்ணீர் விநியோகம் இல்லாததால், ஆண்டிற்கு மூன்று மாதங்கள், இந்த கோடா குடும்பம் மழைநீரைத்தான் பயன்படுத்துகிறதாம். 

கடந்த ஆண்டு வரை மழைநீரை நேரடியாக நிலத்திற்குள் அனுப்பிக்கொன்டிருந்த இவர்கள், இந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பிரச்னை காரணமாக, தங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை நிலத்தடி தொட்டியில் சேமித்த பிறகே நிலத்திற்குள் அனுப்பியுள்ளனர். தண்ணீர் லாரிகளிடம், அதிக பணம் செலவளித்து தண்ணீர் வாங்க வேண்டிய இவர்களின் நிலையை மாற்றி, இந்த குடுத்திற்கு ஒரு கனிசமான தொகையை சேமித்தளித்துள்ளது இந்த மழை.

"நாங்கள் நிலத்திற்குள் இந்த மழைநீரை நேரடியாக செலுத்தினால், அது எங்கள் கிணத்திற்கு வந்து சேர ஆறு மாதங்கள் எடுக்கும். ஆனால், இந்த ஓ.எம்.ஆரில் எங்களுக்கு குழாய் வழி தண்ணீர் விநியோகம் இல்லை, எங்களுக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்பட்டது. அதனால், இன்று மழை பேய்தால் அதனை சேகரிக்கலாம் என நாங்கள் முடிவு செய்தோம். இன்று நாங்கள் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேகரித்துள்ளோம் என்றால் எங்களுக்கு 5000 ரூபாய் சேமிப்பாகியுள்ளது." என்று அந்த குடும்பத்தின் தலைவரான ஹர்ஷா கோடா தெரிவித்தார்.

இந்த மழைநீரை எப்படி சேமித்தோம் என்பது குறித்த, இவரின் மனைவி பிரபா கோடா விவரித்துள்ளார். "எங்கள் மேற்கூரையில் ஒவ்வொரு சதுர அடிக்கும் ஒரு மணி நேரம் மழை பேய்தால் 1 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். எங்கள் வீட்டு மேற்கூரை 25000 சதுர அடி கொண்டுள்ளது. அதனால், நேற்று பெய்த ஒரு மணி நேர மழையில் சுமார் 25 ஆயிரம் லிட்டரை நாங்கள் சேமித்துள்ளோம்." என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 56 குடியிருப்புகளுக்கு 3 நாளைக்கு தேவையான தண்ணீரை நாங்கள் சேகரித்துள்ளோம்." என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் மழை நீர் சேமிப்பின் அவசியத்துடன், ஒரு மணி நேர மழை எவ்வளவு தண்ணீரை நமக்கு அளிக்கிறது என்பதை இவர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள், இந்த கோடா குடும்பத்தினர்.

.