சென்னை தண்ணீர் பிரச்னை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த லியனார்டோ டிகாப்ரியோ
டைட்டானிக் (Titanic), ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet), இன்செப்ஷன் (Inception), ஆஸ்கர் விருது பெற்ற 'தீ ரெவனன்ட்' (The Revenant) போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடத்துள்ள பிரபலமான ஹாலிவுட் நடிகர்தான் இந்த லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio). ஹாலிவுட் நடிகர் என்று ஒரு முகம் மட்டுமில்லாமல், ஒரு சுற்றுச்சூழல் ஆர்வளர் என்ற மற்றொரு முகத்தையும் கொண்டுள்ளார். இயற்கைக்கு எதிராகவும், இயற்கையில் பயணம் செய்துகொடிருக்கும் சக உயிர்களுக்கு எதிராகவும் நேர்ந்து வரும் அநீதிகளுக்கு வெகுநாட்களாக, இந்த டைட்டானிக் நாயகன் குறல் கொடுத்து வருகிறார். லியனார்டோவின் சமுக வலைதளப் பக்கங்கள் இதற்கு ஒரு சான்று.
பெருங்கடலில் பிளாஸ்டிக் குப்பை, பிளாஸ்டிக் குப்பைகளினால் பாதிக்கப்படும் கடல் உயிரினங்கள், பணத்திற்காக கொல்லப்படும் எறும்புண்ணிகள்- அழிந்து வரும் அதன் இனம், வேட்டையாடப்படும் போர்னியன் ஒராங்குட்டான்கள், பருவநிலை மாற்றம் என பல பிரச்னைகளை பற்றி பேசியுள்ள இவரால், தற்போது பேசப்பட்டிருக்கும் பிரச்னை, 'சென்னையின் தண்ணீர் பஞ்சம்'.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு "இந்த நிலையிலிருந்து சென்னையை மழையினால் மட்டுமே காப்பாற்ற முடியும்" என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், தண்ணீர் இல்லாத இந்த நகரை, காலியான கிணற்றுடன் ஒப்பிட்டுள்ளார் டிகாப்ரியோ.
"முக்கிய நான்கு நீராதாரங்களும் வற்றிப்போனதால், இந்த தெனிந்திய நகரம் மிகப்பெரிய தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் மக்கள் வீதிகளில் தண்ணீருக்கான பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்னையால் பல வனிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அந்த நகரமே தண்ணீருக்காக வேறு வழிகளை தேடி வருகிறது. ஆனால், அந்த நகரம் மழைக்காத்தான் வேண்ட வேண்டும்.", என அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக இவர் இந்திய நகரான கஷிபூரில் மலைபோல குவிந்துவரும் குப்பை பற்றிய ஒரு காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலைபோல குவிந்திருக்கும் இந்த குப்பை, விரைவில் தாஜ் மாஹாலின் உயரத்தை எட்டவுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்த காணொளி.
டெல்லியில் மொத்தம் மூன்று குப்பை கிடங்குகள் உள்ளன. ஒன்று கசிபூர் குப்பை கிடங்கு, மற்றும் தெற்கு டெல்லியில் அமைந்திருக்கும் ஒக்லா குப்பை கிடங்கு, இனொன்று வடக்கில் அமைந்திருக்கும் பல்ஸ்வா குப்பை கிடங்கு. இதில், கசிபூர் குப்பை கிடங்கில்தான் கிழக்கு, மத்திய மற்றும் பழைய டெல்லியில் உற்பத்தியாகும் குப்பைகள் எல்லாம் வந்து கொட்டப்படும். அப்படி கொட்டப்படும் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. அதனால் இங்குள்ள குப்பையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில நாட்கள் முன், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்,"இதன் நிலை என்னவென்றால், இன்னும் சில நாட்களில் இந்த குப்பையாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் மலையின் உயரம் குதுப்மினாரின் உயரத்தையே எட்டிவிடும்" என விமர்சித்திருந்தார்கள்.
இவர், இயற்கைக்கு எதிராகவும், சக உயிர்களுக்கு எதிராகவும் நேர்ந்து வரும் அநீதிகள் பற்றி பதிவிட்டுள்ள சில பதிவுகள் இதோ!
இப்படியான உலக பிரச்னை பற்றி பேசயுள்ள ஒருவர், சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து பேசும் அளவிற்கு, இங்கு தண்ணீர் பிரச்னை மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்பது மிகவும் வருத்தமான செய்தி.