மிகவும் தாமதமாக கேரளத்தில் நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கும் மாவட்டங்களில் தொடர் கனமழையை மக்கள் எதிர்பார்க்கலாம்.
வெளியான வானிலை அறிக்கையின் தகவல்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று பலத்த கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும்.
காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.