This Article is From Nov 07, 2019

Chennai-யில் நண்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது மாணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி!

Crime News - முகேஷ் (Mukesh) என்கின்ற மாணவன், தாம்பரத்துக்கு அருகில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்று வந்துள்ளான்.

Chennai-யில் நண்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது மாணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி!

Crime News - போலீஸும் இந்த விவகாரத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. 

Crime News - சென்னையின் (Chennai) தாம்பரத்தில் (Tambaram) உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் 19 வயது மாணவன், தனது நண்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட (Shot dead) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முகேஷ் (Mukesh) என்கின்ற மாணவன், தாம்பரத்துக்கு அருகில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்று வந்துள்ளான். முகேஷ், தனது நண்பனான விஜய் (Vijay) வீட்டிற்குச் சென்றுள்ளான். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் விஜய், முகேஷை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். 

விஜயின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் முகேஷை, தலையில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குதான் முகேஷின் உயிர் பிரிந்துள்ளது. 

முகேஷை சுட்ட பிறகு, தனது வீட்டில் இருந்து விஜய் ஓட்டம் பிடித்துள்ளான். இந்நிலையில், இன்று அவன் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்துள்ளான். அதைத் தொடர்ந்து அவன் ரிமாண்ட் செய்யப்பட்ட நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட சாதாரண மோதல், இப்படி துப்பாக்கிச்சூடு வரை சென்றிருப்பது சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸும் இந்த விவகாரத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.