கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் சசி தரூர் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
New Delhi: கடந்த சில நாட்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் சசி தரூர், நேற்று தனது மவுனத்தை கலைத்து அவர் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதுகுறித்து டிவிட்டர் பதிவில், தனக்கு ஏற்பட்டுள்ள மோசமான மார்பு தொற்று நோயினால் மட்டுமே தான் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காததற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை சில நாட்கள் முழு ஒய்வு எடுக்கக் கூறி மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால், அடுத்த 3 நாட்களுக்கு நான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தன்னை குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், இதனால் தான் எந்த தொலைபேசி அழைப்புகளையும் ஏற்பதில்லை என்றும் மக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என வலியுறுத்தினார்.
இதனிடையே தனது மற்றொரு பதிவில் அவர், கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசி தரூர், இந்தியாவில் இருக்கும் கல்விமுறை குறித்து விமர்சித்தார். கல்வி முறை கற்பனை திறனை வளர்க்கும் விதமாக இல்லை என்று கூறினார்.
மேலும், இங்கு மாணவர்களுக்கு என்ன யோசிக்க வேண்டும் என்று மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் எப்படி யோசிக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கப்படுவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.