हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 30, 2019

பதவியை விட்டு செல்வதால் கண்ணீர் விட்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர்

6 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது” எனக் கூறிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

கடந்த 2013 ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பூபேஷ் பாஹல் தொடர்ந்து 6 ஆண்டுகள் தலைவராக செயல்பட்டார்.

Highlights

  • சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக மோகன் மர்க்கம் பதவியேற்றுள்ளார்.
  • 2013 முதல் காங்கிரஸ் தலைவராக பூபேஷ் பாஹல் இருந்து வருகிறார்
  • 2018 தேர்தலின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்
Raipur:


சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகுவதை எண்ணி மாநில முதல்வர் பூபேஷ் பாஹல் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதார். 

கடந்த 2013 ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பூபேஷ் பாஹல் தொடர்ந்து 6 ஆண்டுகள் தலைவராக செயல்பட்டார். கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பூபேஷ் பாஹல் முதல்வராகப் பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தொடர்ந்து வந்தார். 

ஆனால் மக்களைவைத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக மூத்த தலைவர் மோகன் மர்க்கத்தை கட்சி தலைமையிடம் கடந்த இரு நாட்களுக்கு முன் நியமித்தது. இதைத் தொடர்ந்து ராய்பூரில் பிரிவு உபச்சார விழா நடந்தது. 

அப்போது முதல்வர் பூபேஷ் பாஹல் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் “கடந்த 2013 ஆம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டேன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டேன். கடந்த 2013 ம் ஆண்டில் தேர்தலில் தோல்வி அடைந்தோம். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடுமையாக உழைத்தோம். ஆனால், ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், நம்முடைய தொண்டர்கள், தலைவர்களின் தொடர் முயற்சியால் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. 6 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது” எனக் கூறிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். 

Advertisement

இதைப் பார்த்த தொண்டர்கள் முதல்வரை வாழ்த்தி, காங்கிரஸ் கட்சியை வாழ்த்தி கோஷமிட்டனர். 
 

Advertisement
Advertisement