This Article is From Dec 16, 2018

சத்தீஸ்கர் மாநில முதல்வர் யார்? நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று அறிவிப்பு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம், சத்தீஸ்கரில் பாஜகவின் 15 வருட கால ஆட்சியை, காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்தது.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் யார் என்று இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்

  • Rahul Gandhi met contenders for Chhattisgarh Chief Minister on Saturday
  • Announcement of name after legislative party meet in Raipur
  • Congress won 68 of 90 seats in the Chhattisgarh assembly elections
Raipur:

நான்கு முதல்வர் போட்டியாளர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்ததை தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்க இருக்கிறது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதலமைச்சராக மூத்த தலைவர் கமல்நாத்தை காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட்டை தேர்வு செய்து அறிவித்தது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர், தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பாஹெல், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தியோ ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இதில் புபேஷ் பெஹலுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இன்று யார் முதல்வர் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

.