Read in English
This Article is From Dec 05, 2019

“சிறையில் மரப்பலகையில் படுத்து தூங்கினேன்?”- மனம் திறந்த P Chidambaram

P Chidambaram - "சிறையில் மரப் பலகையில் படுத்தது எனது கழுத்து மற்றும் பின் புறத்தை வலுவாக்கியுள்ளது."

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பிணை கிடைத்ததால் வெளியேவந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் (P Chidambaram), இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை கறார் தொனியில் விமர்சித்தார். திகார் சிறையில் 106 நாட்களைக் கழித்த சிதம்பரம், சிறைவாசத்தின் போது எப்படியெல்லாம் சிரமடைந்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார். 

“திகார் சிறைவாசம் என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுப்படுத்தியது. என் கழுத்து வலுவாக மாறியுள்ளது, என் முதுகுத் தண்டு வலுவடைந்துள்ளது. எனது மனமும் உறுதியடைந்துள்ளது,” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தீர்க்கமாக பேசினார் சிதம்பரம். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்குப் பிணை கொடுக்க வேண்டும் என்று சிதம்பரம், நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் தனது உடல்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு கோரினார். சிறைவாசத்தின்போது சிதம்பரம், கிட்டத்தட்ட 8 கிலோ வரை எடை குறைந்ததாக அவரின் குடும்ப வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement

“கடந்த 106 நாட்களில் எனது உடலும் மனமும் மேலும் சக்தியடைந்துள்ளன. சிறையில் மரப் பலகையில் படுத்தது எனது கழுத்து மற்றும் பின் புறத்தை வலுவாக்கியுள்ளது. எனது மனமும் தெளிவு பெற்றுளது.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தது. எப்படியும் நீதிமன்றம் எனக்கு நீதியை வழங்கும் என்று நம்பினேன்.

Advertisement

ஒரு அமைச்சராக நான் மிகவும் சரியாக நடந்து கொண்டேன். என்னுடன் வேலை செய்தவர்கள், என்னுடன் தொடர்பில் இருந்த தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், என்னை உற்று நோக்கிய பத்திரிகையாளர்களுக்கு அது தெரியும்,” என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விரிவாக பேசினார். 

 “வெளிவரும் ஒவ்வொரு தரவுகளும் பொருளாதார மந்தநிலையைச் சுட்டிக் காண்பிக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டு வர முடியும். ஆனால், இந்த அரசுக்கு அதற்கான திறன் இல்லை. இந்த ஆண்டு இறுதியில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதம் இருந்தால், அதுவே அதிர்ஷ்டமாக இருக்கும். பொருளாதார வல்லுநரானா அரவிந்த் சுப்ரமணியம், இந்த அரசின் கீழ் வளர்ச்சி 5 சதவிதத்துக்கு வீழும் என்று எச்சரித்தார். உண்மையில் அது 5 சதவிகிதம் அளவுக்குக் கூட இல்லை. 1.5 சதவிகிதம்தான்,” என்று பொருளாதர மந்தநிலை பற்றி கருத்து கூறினார். 
 

Advertisement